இனவாதத்தை கடைப்பிடித்த ஜே.வி.பி. அதுபற்றி ஒருபோதும் பேசக் கூடாது
இனவாதத்தை அரசியல் ரீதியாக இலக்கு வைத்து, தற்போதுள்ள அடிப்படைப் பிரச்சினைகளை குழிதோண்டிப் புதைக்கும் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் பாராளுமன்றத்திலும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்து தொடர்பில், அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையில் தாம் ஒருபோதும் இனவாதியாக இருந்ததில்லை எனவும், எனவே அமைச்சரின் வெட்கமற்ற கூற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதிநிதித்துவப்படுத்தும் அசல் அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன இந்த நாட்டில் இனவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு முறையும் தான் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நின்றதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடக சந்திப்பில் அமைச்சர் நளிந்த தனது முகநூலில் தரவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தை காட்டினார். அங்குள்ள நபர் புலிகளின் கொடியை ஏந்தியிருந்தாலும் அங்கு எழுதப்பட்ட கவிதை தமிழ் தேசிய எதிர்ப்பு அல்ல, புலி பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலைகளில், பயங்கரவாதத்தை ஒடுக்கி, இனவாதத்தை அரசியல் ரீதியாக இலக்கு வைக்காமல், தற்போதுள்ள அடிப்படைப் பிரச்சினைகளை குழிதோண்டிப் புதைக்கும் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாது இனவாதத்தை தோற்கடிக்குமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()