விழி வெண்படல அழற்சி; எவ்வாறு குணப்படுத்தலாம்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை தான் கண் நோய் எனப்படும் விழி வெண்படல அழற்சி.

கண்ணின் வெண் படலத்தில் உருவாகும் இப் பாதிப்பு கண்களையும் இமைகளையும் எப்பொழுதும் கலங்கிய நிலையில் ஈரப்பதத்துடனேயே வைத்திருக்கிறது.

இப் பாதிப்பு பெருமளதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் முறையான கவனிப்பு இல்லாவிட்டால் பத்து நாட்கள் வரை தொந்தரவு செய்யும்.

இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் எனப் பார்ப்போம்.

  • காய்ந்த கொத்தமல்லியை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குளிரவிட வேண்டும்.
  • அரும்கம்புல், மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்து நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வரையில் வெயிலில் உலரவிட்டு தலையில் தேய்த்து வந்தால் கண் நோய் குணமாகும்.
  • வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி மிதமான சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்தால் கண் வலி குறைவடையும்.
  • பன்னீரில் மஞ்சள், படிகாரம், மரமஞ்சள் ஆகியவற்றை கலந்து இரவே ஊறவைத்து காலையில் அதனை வடிகட்டி அந் நீரைக் கொண்டு முகம், கண்கள் ஆகியவற்றைக் கழுவி வந்தால் கண் கட்டி குறைந்து கண் சிவப்பு இல்லாமல் போகும்.
  • புளியம் பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண் சிவப்பாதல் ஆகியவை குறையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *