சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம்
சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை முற்றுகையிட்டிருந்த நிலையில் சிரிய படையினர் அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த சில மணித்தியாலங்களில் எங்கள் படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளனர் எங்கள் தரப்பில் பலர் மரணித்துள்ளனர் அந்த குழுக்கள் ஹமா நகரின் பல பகுதிகளிற்குள் நுழைந்துள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.
சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது.
![]()