ஹிருணிகா பிரேமச்சந்திர: குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லையெனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *