பலதும் பத்தும்

சாதனை படைத்த டைட்டானிக் வொட்ச்!

டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக கேப்டன் ஆர்தர் ஹென்றி ரோஸ்ட்ரானுக்கு வழங்கப்பட்ட தங்க பொக்கெட் கடிகாரம் 16 கோடி ரூபாவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

வரலாற்றில் சிறப்புமிக்க டைட்டானிக் கப்பல் ‘வைட் ஸ்டார்’ என்ற நிறுவனத்தால் 1911ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கடந்த 1912இல் இந்தக் கப்பல் தனது முதல் பயணமாக சவுத்தாம்ப்டனில் இருந்து நிவ்யோர்க் நகரத்திற்குப் புறப்பட்டது. இதில் 2,200 பயணிகள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2,200 பயணிகளில் 1,500 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிகழ்வானது, வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மீதமிருந்த, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 700 பயணிகளை கெப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான் காப்பாற்றினார்.

ரோஸ்ட்ரான் காற்றிய 700 பயணிகளில் ஜோன் பி தைய்யர், ஜோன் ஜேக்கப் ஆஸ்டர் மற்றும் ஜோர்ஜ் டி வைட்னர் ஆகிய மூன்று பெண்களும் அடங்குவர். இவர்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக கெப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின் 18 கெரட் தங்க பொக்கெட் கடிகாரத்தைப் பரிசாக அளித்தனர்.

டைட்டானிக் கப்பல் விபத்துக்குப் பிறகு அதிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் அல்லது அவை தொடர்பான நினைவுப் பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்பட்டு வருவதுண்டு. அந்த வகையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வயலின் கடந்த 2013இல் ரூ.11.65 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளாக இந்த வயலின்தான் டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற சாதனையைப் படைத்திருந்தது.

இந்நிலையில் கெப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானின் தங்க பொக்கெட் கடிகாரம் அந்த வயலினின் சாதனையை முறியடித்து உலக சாதனைப் படைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.