பிரித்தானிய ஹெலிகாப்டரில் பாலியல் உறவு கொண்ட ராணுவ வீரர்கள்
பிரித்தானிய ராணுவத்திற்கு சொந்தமான ஹொலிகாப்டரில் 2 ராணுவ அதிகாரிகள் பாலியல் உறவு கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ராணுவ பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டரில் (Apache helicopter) ரோட்டர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆடியதுடன், அதிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்டதை தொடர்ந்து பாராமரிப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனையிட்டனர்.
அப்போது இரண்டு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் பாலியல் உறவு மேற்கொண்டு இருந்துள்ளனர்.
பராமரிப்பு அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததை அடுத்து, உயர் அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்துள்ளார்.
ராணுவ அதிகாரிகள் பிடிபட்ட போது மது போதையில் இருந்ததாகவும், ஆண் ராணுவ வீரர் ராணுவ உடையிலும், பெண் ராணுவ வீராங்கணை பொது உடையிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
30mm பீரங்கிகள் மற்றும் Hellfire ஏவுகணைகளை தாங்கிய 8.5 மில்லியன் யூரோ மதிப்பு கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் 653 Squadron என்ற ராணுவ பிரிவை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது.
பாலியல் குற்றத்தில் மாட்டிக் கொண்ட இரண்டு ராணுவ அதிகாரிகளும் வேறு ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய ராணுவத்தில் நடந்த இந்த சம்பவம் 2016ல் நார்தம்பர்லேண்டில் உள்ள ஓட்டர்பர்ன் முகாமில் நடந்ததாக The Sun செய்தி நிறுவனத்தின் தகவல் படி தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த சம்பவம் தற்போது பகிரங்க படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துக்கு பிறகு விமானங்களின் கதவுகள் பாதுகாப்பு கருதி பூட்டப்பட்டுள்ளதாக என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.