பலதும் பத்தும்

எதிர்மறையை ஏற்படுத்தும் மூன்று கனவுகள்; எளிய தீர்வு இதுதான்

நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள், நினைவுகளின் வெளிப்பாடுதான் கனவுகள் என்று கூறப்படுகிறது.

ஆனால், சில நேரங்களில் ஒரு சிலர் காணும் கனவுகள் அவர்களது வாழ்வில் நேர் மறையான நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

அல்லது மறைமுகமான நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

அந்த வகையில், ஒருவர் காணும் சில கனவுகள் அவர்களது வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.

மரம் விழுவது போன்ற கனவு

மரம் விழுவதைப் போன்ற கனவு கண்டால், அந்த மரம் எந்தளவுக்கு பெரிதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு நமக்கும் சேதாரம் ஏற்படும்.

இவ்வாறான கனவு காணும்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதோடு, வாகனங்கள் இயக்கும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எண்ணெய் தடவும் கனவு

எண்ணெய் தடவுவது போன்று கனவு வந்தால் தெரிந்தோ தெரியாமலோ பெரிய பிரச்சினையில் சிக்கப் போகிறோம் என்று அர்த்தம். குறித்த கனவை கண்ட நபருக்கு உடல்நலனில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

திருமணக் கனவு

திருமணம் நடப்பது போல கனவு கண்டால் அது அபசகுணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதோடு, துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்.

தீர்வு

இவ்வாறான கனவுகள் வரும்பட்சத்தில் விநாயகர் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் அப் பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.