நீடா அம்பானியின் Luxury Watch Collections!; விலையின் மதிப்பு லட்சம் முதல் கோடி வரை
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி வைத்திருக்கும் ஆடம்பர வாட்ச் கலெக்ஷன்ஸ் பற்றி பார்க்கலாம்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி தனது தனித்துவமான ஆடை மற்றும் நகைகள் மூலம் கவனத்தை ஈர்த்து வருபவர். அந்தவகையில் அவரது ஆடம்பர கடிகாரங்களின் தேர்வும் சிறப்பாக உள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவின் போது நீடா அம்பானி ஆடம்பரமான கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.
இந்த Jacob & Co பிராண்டின் Fleurs De Jardin Pink Sapphire கைக்கடிகாரத்தின் விலை ரூ.3.9 கோடி ஆகும்.
இந்த வாட்ச்சில் கார்டன்-ஸ்டைல் டயல் ( garden-style dial) உள்ளது. இதன் வசீகரம் என்னவென்றால் 18 கேரட் கோல்ட் கேஸ் ஆகும். இதில் ரெயின்போ சபையர்களுடன் உள் வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது நீடா அம்பானி தனது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாக இருந்தார். அவர், Patek Philippe Nautilus ஆடம்பர கடிகாரத்தை அணிந்திருந்தார்.
இந்த வாட்ச் 1976 -ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து விளையாட்டுக் கடிகாரங்களில் ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. இதன் விலை ரூ.54 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
நீடா அம்பானி சமீபத்தில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் எடுத்த புகைப்படத்தில் ஆடம்பரமான படேக் பிலிப் அக்வானாட் லூஸ் ஹாட் ஜோய்லரி (Patek Philippe Aquanaut Luce Haute Joaillerie) வாட்சை அணிந்திருந்தார்.
இந்த ரோஸ் கோல்ட் வாட்ச்சானது செக்கர்போர்டு வடிவத்துடன் பொறிக்கப்பட்ட முத்து டயலைக் கொண்டுள்ளது. சிக்கலான கைவினைத்திறன் இந்த வாட்சின் விலை ரூ.1.3 கோடி முதல் ரூ 1.6 கோடி ஆகும்.
நீடா அம்பானியின் வாட்ச் சேகரிப்பில் தனிப்பயனாக்கப்பட்ட Bvlgari Serpenti வாட்ச் உள்ளது. இதன் விலை ரூ.99 லட்சம் ஆகும். வைரம் பதித்த வளையல் மாடலில் இந்த வாட்ச் உள்ளது.இந்த கடிகாரம் அதன் இரட்டை சுழல் வளையலில் 17.0 காரட் வைரங்களைக் கொண்டுள்ளது.
நீடா அம்பானியிடம் Cartier Libre WD000002 ஆடம்பர கடிகாரமும் உள்ளது. இந்த கடிகாரத்தின் விலை ரூ.25 லட்சம் ஆகும்.