பிரான்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி : பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கைது !

பிரான்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்  செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபருக்குச் சொந்தமாக எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *