பலதும் பத்தும்

ஆவிகளுடன் பேசும் பெண்ணுக்கு ஜோதிடர் கூறிய திருமண ஆலோசனை

ஆசிய நாடுகள் சிலவற்றில் திருமணத்துக்காக ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்கும் வழக்கம் உள்ளது நம்மில் பலரும் அறிந்த விடயம்தான்.

இந்நிலையில், பிரித்தானிய பெண்ணொருவர் தன் கணவர் யார், திருமணம் எப்போது நடத்துவது என்பது போன்ற விடயங்களை தனது ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால், அவரே ஆவிகளுடன் பேசும் திறன் கொண்ட ஒரு பெண்தான்!

பிரித்தானியரான TJ Higgs, ஆவிகளுடன் பேசுபவர் என அறியப்பட்ட பிரபலம் ஆவார். தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்காக தனது ஜோதிடரான Jane Starrs என்னும் பெண்ணிடம் தான் ஆலோசனைகள் கேட்டு அதின்படி நடப்பதுண்டு என்கிறார் Higgs.

தன்னை Stuart என்பவர் காதலிப்பதாகக் கூறியபோது, அவரைத் திருமணம் செய்யலாமா என தன் ஜோதிடரிடம் கேட்டதாக தெரிவிக்கும் Higgs, அவர் மறுத்திருந்தால் தானும் அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருப்பேன் என்கிறார்.

அத்துடன், தனது திருமணம் ஜூலை மாதம் 29ஆம் திகதி, 12.30 மணிக்குத்தான் நடக்கவேண்டும் என தன் ஜோதிடர் கூறியதாகவும், அதன்படியே தாங்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார் Higgs.

விடயம் என்னவென்றால், 14 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பே இல்லாமல் இருந்த தன் தந்தை முதன்முறையாக தன்னை சந்திப்பார் என அவரது ஜோதிடரான Jane கூற, அது அப்படியே நடந்ததாம்.

ஆகவே, வாழ்வில் எந்த விடயமானாலும் Janeஉடைய ஆலோசனையைக் கேட்டு அதன்படிதான் நடப்பேன் என்கிறார் Higgs.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.