
கிழக்கு உக்ரைனிய நகரமான கிரெமடோர்ஸ்கில் Krematorsk பயணிகள் பேருந்து ஒன்று வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுதாக்குதல் ரஷ்யாவால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக மீட்பு பணிகளிலும் சிக்கல் நிலவியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒருநாளிற்கு முன்பு உக்ரைனின் வடக்கு நகரமான ப்ரைலுகியில் Pryluky நடந்த மற்றொரு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர். குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளனர். அவசரகால சேவைகள் இடிபாடுகளில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()