வடமேற்கு பாகிஸ்தானில் இனக்கலவரம்; ஏழு பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் இனக்கலவரத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் இரு எதிரி குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் குறிவைக்கப்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளதாக மூத்த அதிகாரி ஜாவேதுல்லா கான் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *