இந்தியா

சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச் சென்று அடிப்போம்!

சீமானுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்தால் தேடிச்சென்று அடிப்போம் என்று கட்சியிலிருந்து பிரிந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு தற்போதைய நிர்வாகிகள் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பல நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இன்று கூட பெண் நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கட்சியிலிருந்து விலகியவர்கள் செய்தியாளர்களை சந்தித்து சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக செய்தியாளர் சந்திப்பில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் அறிவித்தார். “கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் தான் அந்தக் கட்சியிலிருந்து விலகுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது திடீரென, தற்போதைய நாம் தமிழர் நிர்வாகிகள் வந்து, சீமானுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திரனை அடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், “சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச்சென்று அடிப்போம்” என அவர்கள் மிரட்டியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *