வடகொரியா- தென்கொரியா நாடுகள் மீண்டும் ஏவுகணை சோதனை!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா நாடுகள் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் எனவும் வடகொரியா எச்சரித்து வருகிறது.

இதேவேளை அமெரிக்காவில் தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதுடன் கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல்வேறு குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்ததாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் தெரிவித்துள்ளன.

அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *