தீபாவளியில் செல்வம் பெருக சக்தி வாய்ந்த குபேர மந்திரங்கள்!

நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருப்பவர்கள், நிதி முடக்கத்தை சந்திப்பவர்கள் ஆகியோர் குபேரரை வழிபடுவது சிறப்பு.

குபேரரின் அருளை பெற தீபாவளி அன்று பெறுவது மிக முக்கியமானதாகும்.

அன்றைய தினம் லட்சுமி தேவியையும், தன்வந்திரி பகவானையும் வழிபடுவதுடன், குபேரரையும் வழிபடுவது சிறப்பு.

செல்வத்தையும், குபேரரின் அருளையும் பெறுவதற்கு தீபாவளி அன்று கீழ் கண்ட மந்திரங்களை மட்டும் மனதார சொல்லி வழிபடுவது சிறப்பு.

எவர் ஒருவர் அந்த மந்திரங்களை மனதார குபேரரையும், லக்ஷ்மியையும் வழிபட்டு சொல்கிறார்களோ அவர்களுக்கு நிறைவான செல்வம், தொழில் வெற்றி, பொருளாதார உயர்வு, செல்வ வளம் ஆகியவை தேடி வரும்.

குறையாத, நிலையான செல்வத்தையும் குபேரன் அருள்வார் என்பது நம்பிக்கை.தீபாவளி அன்று மாலையில் விளக்கேற்றி வைத்து, குபேர மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு.

மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் சிறப்பு.

சக்திவாய்ந்த குபேர மந்திரங்கள் :

“ஓம் யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதான்யதிபதியே
தனதான்யசம்ரிதிம் மே தேஹி தபய ஸ்வாஹா”
குபேர தியான மந்திரம் :

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ”

குபேர அஷ்ட லட்சுமி மந்திரம் :

“ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீம் குபேராய அஷ்ட லக்ஷ்மி மம க்ரீஹே தனம் புரய புரய நமஹ”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *