இந்தியா

“புதிது புதிதாக வரட்டும்”: த.வெ.கவுக்கு தயாநிதி மாறன் சாடல்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் முதல் மாநாடு நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவண்டியில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய கட்சித் தலைவர் விஜய், கட்சியின் பெயர் மற்றும் கொடியின் விளக்கத்தை கூறியிருந்தார்.

மேலும் தி.மு.க கட்சி தான் தனது அரசியல் எதிரி என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் தி.மு.க எம்.பி.தயாநிதி மாறன் விஜய் கட்சி தொடங்கியது பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள். தப்பே இல்லை. புதிது புதிதாக வரட்டும். நமக்கும் போர் அடிக்குது. பழைய முகங்களையே பார்த்து எவ்வளவு நாள் தான் நேரத்தை செலவழிப்பது.

நமக்கும் கொஞ்சம் நேரம் போக வேண்டுமே. நாம் பார்க்காதவர்களா? எத்தனை முகங்களை பார்த்திருக்கிறோம்.

அத்தனை முகங்களையும் பார்த்து மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரே கட்சி என்றால் அது தி.மு.க தான்.

தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வதால் மக்கள் நம்மை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *