50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவில் தொடர்ந்து 14 வது நாளாக நேற்று 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்திய விமான நிறுவனங்களை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் 14வது நாளாக நேற்று சுமார் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் 15 விமானங்களுக்கும், இண்டிகோவின் 18, விஸ்தாராவின் 17 விமானங்களுக்கு மிரட்டல் வந்ததாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் இண்டிகோவின் 2 விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத், மும்பைக்கு திருப்பி விடப்பட்டன.

நேற்று வரை 14 நாளில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button