பாபநாசம் பட பாணியில் பெண் கொலை!

பாபநாசம் படபாணியில் பெண்ணை கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் 4 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்த விமல் சோனி ஜிம் நடத்தி வருகிறார். இவரது ஜிம்மில் அதே சிவில் லைன்ஸ் குடியிருப்பாளர் ஏக்தா குப்தா (32) என்ற பெண் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா மாயமானார். இது குறித்து கணவரான பங்கு சந்தை தரகர் குப்தா பொலிஸில் புகார் செய்தார். ஆனால், ஏக்தா குப்தா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 4 மாதத்துக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஏக்தாவை கொலை செய்ததாக ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி கைது செய்யப்பட்டுள்ளதார்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில், பங்கு சந்தை தரகரின் மனைவியான ஏக்தா குப்தாவுடன் விமல் சோனிக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது. இதற்கு, ஏக்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button