இந்தியா

புது டெல்லியை உலுக்கிய வெடிப்பு சம்பவம்!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு பயங்கர வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த மர்மமான வெடிப்புச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, எனினும் கல்லூரியின் சுவர் சேதடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், வெடிவிபத்தில் கல்லூரிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும், அப்பகுதியில் உள்ள கடைகளின் பலகைகள் சேதமடைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி பொலிஸ் துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியின் பிரசாந்த் விஹாரில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் கல்லூரிக்கு அருகே இன்று காலை 7.47 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *