ட்ரம்ப் மீதான தாக்குதல்; வெளியான எச்சரிக்கை அறிக்கை

அமெரிக்க புலனாய்வு சேவையில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. அவை விரைவாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனினில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்ததைப் போன்ற கொலை முயற்சிகள் மீண்டும் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன குழு, கடந்த வியாழனன்று தமது அறிக்கையை வெளியிட்டது.

இந்த விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவின் பட்லர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிரம்ப் காயமடைந்துடன், பேரணியில் பங்கேற்றவர் ஒருவர் உயிரிழந்தும் இருந்தார். இதனை தொடர்ந்து பாதுகாப்புத் துறை செயலர் அலெஜான்ட்ரோ மேயர்காஸ், முன்னாள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைக் கொண்ட விசாரணை குழுவை நியமித்தார்.

இந்த குழு 52 பக்கம் கொண்ட தமது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ”அமெரிக்க புலனாய்வு துறையில் அடிப்படை சீர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதன் தலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது போனால் மற்றுமோர் பட்லர் தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம். அமெரிக்க புலனாய்வு சேவை ஏற்கனவே அதன் தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு நடந்து முடிந்த சில வாரங்களுக்குப் பின்னர் அதன் பணிப்பாளர் இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button