தேர்தல் களம்

தியாக தீபத்தை வழிபட்டு தமிழ் மக்கள் கூட்டணியினர் நேற்று வேட்பு மனுத் தாக்கல்

தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை நேற்றுக் கையளித்தனர்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான வேட்புமனுவை நேற்றுக் காலை 11.30 மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
அக்கட்சி மான் சின்னத்தில் களமிறங்குகின்றது.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்தப்பட்டது.

இத் தேர்தலில் வேட்பாளர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *