இலங்கை

இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிய கைதிகள்: தனி விமானத்தில் நாடு திரும்பினர்

இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

கைதிகளை திருப்பியனுப்பும் அனைத்து செலவுகளையும் அந்நாட்டின் பிரபல வர்த்தகரும், மத்திய அமைச்சருமான அப்துல் அலீம் கான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அப்துல் அலீம் கானின் இந்த செயலுக்கு அந்நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.

இந்த செயல்முறைக்கு முழுவதும் ஒத்துழைத்த இலங்கை அரசாங்கத்திற்கும், உயர்ஸ்தானிகருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானிய பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக, அமைச்சர் நக்வியின் பணிப்பின்படி, உள்துறை அமைச்சகம் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.