உலகம்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்ததுடன் 3,000 பேர் வரையில் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த தடையை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.