இம் மாதம் இரண்டு தடவைகள் பெயர்ச்சி அடையும் புதன்: இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

புத்திசாலித்தனமான கிரகமான புதன் இந்த மாதம் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார்.

ஒக்டோபர் 10ஆம் திகதி காலையிலும் ஒக்டோபர் 29ஆம் திகதி இரவும் என இரண்டு தடவைகள் பெயர்ச்சி அடைகிறார்.

இந்த பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

துலாம்

புதனின் இரண்டு பெயர்ச்சிகளுமே துலாம் ராசியினருக்கு மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். அதன்படி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளும் இக் காலகட்டத்தில் முடிவுக்கு வரும். மேலும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல இலாபத்தைப் பெறுவார்கள். நல்ல வரன் கிடைக்கும். புகழ் பெறுவார்கள்.

விருச்சிகம்

இக் காலகட்டத்தில் இவர்களின் வறுமை நீங்கும். அத்துடன் நிதி நிலை வலுவாக இருக்கும். முன்பை விட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டங்கள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மகரம்

மரியாதை, பாராட்டு இரண்டும் கிடைக்கும். கடின உழைப்பின் பலனை அனுபவிப்பீர்கள். வெற்றிப் படிக்கட்டில் ஏற முடியும். நல்ல தொழில் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button