திருமலையில் அந்தரங்க உறுப்பை அறுத்து மேசையில் வைத்து விட்டு உயிர்மாய்ப்பு

இளைஞர் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை அறுத்து மேசையில் வைத்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது.

திருகோணமலை – ஹபரணை புகையிரத நிலைய வீதியை சேர்ந்த 27 வயதான வெல்கம டொன் தினேஷ் மதுஷங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் சுகயீனம் காரணமாக கிளினிக்கிற்குச் சென்ற குறித்த இளைஞர் சில சமயங்களில் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான உடல் நிலை காரணமாகவே குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்ததாக இளைஞரின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் தனது பெற்றோருடன் வசிக்கும் வீட்டை அண்டியுள்ள தனக்கு சொந்தமான வர்த்தக நிலைய அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button