புனே ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை 7 மணியளவில் நடந்ததாக புனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிஷ்குமார் பிள்ளை, பிரீதம்சந்த் பரத்வாஜ் மற்றும் பரம்ஜீத் ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெலிகொப்டர் டெல்லியை சேர்ந்த ஹெரிடேஜ் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான உறுதியான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button