உலகம்
இஸ்ரேல் மீது லெபானான் தாக்குதல்: இராணுவ உளவுத் தளம் இலக்கு
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, டெல் அவிவ் அருகே உள்ள கிளிலோட்டின் இஸ்ரேலிய இராணுவ உளவுத் தளத்தை இலக்கு வைத்துள்ளது.
“இராணுவ உளவுப்பிரிவு பிரிவு 8200 இன் க்ளிலோட் தளத்திலும், டெல் அவிவின் புறநகரில் அமைந்துள்ள மொசாட் தலைமையகத்திலும் ஃபாடி 04 ராக்கெட்டுகளை ஏவியதாக ஈரான் ஆதரவு குழு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிலோட்டின் முக்கிய இஸ்ரேலிய இராணுவ உளவுத் தளத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாக ஒகஸ்ட் மாதத்தில் நஸ்ரல்லாஹ் கூறினார்.
அப்போது ஹிஸ்புல்லாவின் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.