முச்சந்தி

“கைத்துப்பாக்கிகளை தாமதமின்றி ஒப்படையுங்கள்”; முன்னாள் நாடாளுமன் உறுப்பினர்களுக்கு உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில், கைத்துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கும் வகையில், கடந்த அரசாங்கத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஓகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, நாட்டில் நிலவும் வன்முறை போக்கு காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் ஆதரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button