தொடர்ச்சியாக இரண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதலாவது தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்ததுடன் மருத்துவமனையின் பல தளங்களின் கூரைகள் சேதமடைந்தன.
இதன்போது, நோயாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதில் ஐவர் உயிரிழந்தனர்.
ஒகஸ்ட் மாதம் ரஷ்யாவின் அண்டை நாடான குர்ஸ்க் பகுதியில் உக்ரெய்னியப் படைகள் ஒரு நடவடிக்கையை ஆரம்பித்து டஜன் கணக்கான குடியேற்றங்களைக் கைப்பற்றியதிலிருந்து சுமி நகரம் மற்றும் சுமி பிராந்தியத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன.
சுமி நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 32 கிலோ மீற்றர் (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ரஷ்யப் படைகள் ட்ரோன்கள் மற்றும் குண்டுகள் மூலம் பிராந்தியத்தையும் நகரத்தையும் தாக்கி வருகின்றன.