நியூயோர்க் நகர மேயர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் விதிப்பு!
நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் (Eric Adams) மோசடி, இலஞ்சம் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பிரச்சார நன்கொடைகள் உட்பட ஐந்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஆடம்ஸ் 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் பெறுமதியான நலன்களை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாட்டு பிரச்சாரங்கள் மூலம் பெற்றதாக கூறப்படுகின்றது.
ஆடம்ஸ் 2018 ஆம் ஆண்டில் பல துருக்கிய வணிகர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதாகவும், கடந்த ஆண்டு தனது மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்களிடமிருந்து தொடர்ந்து நன்கொடைகளை கோரினார் என்றும் குற்றச்சாட்டு கூறுகிறது.
அவருக்கு எதிரான அனைத்து வகையான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இதேவேளை சதி குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது