தீபாவளிக்குப் பின் அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்; எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி பண்டிகை. ஜோதிடத்தின் அடிப்படையில் தீபாவளிக்கு முன்னும் பின்னும் சில கிரகங்களின் நிலைகள் மாறும்.

அதன்படி ஒக்டோபர் 9ஆம் திகதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

சரியாக 15 நாட்கள் கழித்து சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை செலுத்தினாலும் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயம் கிடைக்கும்.

எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் எனப் பார்ப்போம்.

மேஷம்

தீபாவளிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை உயரும். முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும்.

ரிஷபம்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் வெற்றியைப் பெற்றுத்தரும்.

மகரம்

எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட இனிய செய்தி கிடைக்கும். பேச்சுத் திறமையால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button