இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியோருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு நிதி உதவி வழங்கியதா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது இராணுவப் புலனாய்வாளர்கள் சி.ஐ.டி.யினரை தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என பாரதூரமான கரிசனையை வெளியிட்டுள்ளார்.

2019 ஏப்பிரல் 21ம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று,உன தெரிவித்துள்ள அவர் விசாரணைகளின் போது இராணுவபுலானய்வு பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் என தெரிவித்துள்ளார்.

தெகிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை( 2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என இராணுவபுலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டினார்கள்,தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவ சீருடையை அங்குமறைத்து வைத்தனர் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 25 ம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான ஜஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தாக்குதலி;ற்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார்,இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஷானி அபயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுணதீவு கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவப் புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள்,எனத் தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.