கவிதைகள்

மரத்தை அப்புறப்படுத்த… கவிதை… முல்லைஅமுதன்

இந்த மரத்தை
அப்புறப்படுத்தப் போகிறார்கள்.

செடிகளும், அருகிருந்த மரங்களும்
பேசிக்கொண்டனர்.
காதலர்களும்,கவிஞர்களும்
கவலைப்பட்டனர்.

அதிக காலம் நம்முடன் வாழ்ந்திருகிறது..
அப்பா கவலையுடன் சொன்னார்.
அம்மா தன் வயதுத்தோழிகளுடன்
குந்தியிருந்து பேன் பார்த்து,

ஊர்க்கதைகள் பேசியதை நினைவுகூர்ந்தாள்.
அதன் பருத்த வெளிக்கிளம்பியிருந்த வேர்களுக்குள்
ஒளிந்துவிளையாடி மகிழ்ந்திருந்ததை
அக்கா தன் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இயந்திரம் வந்து

ஒவ்வொன்றாக சிதிலம் சிதிலமாக
உடல் அரிவதைப்போல அரிந்து கொண்டிருக்க
அப்பா கண்களை மூடிக்கொண்டார்.அவருள்
உயிர்ப்புடனிருந்த குருதி கொப்பளித்திருக்கவேண்டும்..
உயிருடனிருந்த ஒரு உயிர் உயிரற்று இன்று
நம்மிடமிருந்து செல்வதைப் பர்த்து ஊரே அழுதது.

முல்லைஅமுதன்
26/09/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *