சுவிஸில் வலியில்லாமல் தற்கொலை செய்துகொள்ள இயந்திரம்; பொலிஸார் தீவிர விசாரணை
சுவிட்ஸர்லாந்தில் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக சுவிட்ஸர்லாந்தில் சார்கே என்ற நிறுவனம் ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரத்தை கண்டுப்பிடித்து அறிமுகம் செய்திருந்தது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் பிலிப் நிட்ச்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்த இயந்திரத்தின் உதவியுடன் ஒருவர் வலியில்லாமல் ஐந்து நிமிடங்களில் உயிரிழக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவப் பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடிய சிறிய அறைப்போன்ற இந்த இயந்திரத்திற்குள் நைட்ரஜன் வாயுவை செலுத்துவதன் மூலம் உள்ளே இருக்கும் நபர் ஆள்ந்த உறக்க நிலைக்குச் சென்று ஐந்து நிமிடங்களில் வலியில்லாமல் உயிரிழந்துவிடுவார்.
இந்த இயந்திரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
2020ஆம் ஆண்டு மாத்திரம் அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மெரிஷாவுசெனில் அடர்ந்த காட்டு பகுதியில் அருகே இந்த தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு உதவியதாக சந்தேகத்தின்பேரில் பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.