தியாக தீபம் திலீபன் 37வது நினைவு தினம்: வவுனியா பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியில் இடம் பெற்றிருந்தது.

இந்நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

இவ்வஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button