உலகம்
அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது.
அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமாக 256 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.