பலதும் பத்தும்

அனாவசிய செலவைத் தவிர்க்கும் வழி முறைகள்!!!!

பெரியதாக ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைகள்தான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீரை பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்!!!.

2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லுங்கள்!

3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூடை இல்லை என்றால் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டுபோய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான்களை வாங்குங்கள்.

4. வார இறுதி நாட்களில் வீட்டிலயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்கள்.

5. திரைப்படத்தை multiplex அல்லாத திரையரங்குகளில் பாருங்கள்

6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாமல் பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம்.

7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்கள்.

9. பழைய பழக்கங்கள் போல , சுற்றுப் பயணம் சென்றால், நண்பர்கள் எவராவது ஒருவர் வீட்டில் தங்குங்கள்.

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலைகளைச் செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படிச் செய்தால் உடல் ஆரோக்கியமாகும். மிகப்பெரும் பணம் மிச்சமாகும். சொந்தம் பெருகும். மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் . நட்பு வட்டங்கள் உண்மையாகும். உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.