டிமென்ஷியா எனும் மறதி நோய்; வயதானவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகிறதா?
வயது ஏற ஏற அனைத்து நோய்களுடனும் சேர்த்து மறதியும் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் வயதானவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய டிமென்ஷியா Dementia மற்றும் அல்சைமர் இரண்டும் ஒன்றுதான்.
64 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் இந்த டிமென்ஷியா என்னும் மறதி நோய் நினைவாற்றல், அறிவாற்றல், நடத்தை, சிந்தனை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல் அல்சைமர் என்று கூறப்படுவது ஒரு நியூரோடிஜெனரேடிவ் கோளாறு ஆகும். இது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை பாதிக்கிறது.
அல்சைமர் நோயின் பாதிப்பு வயதுக்கு ஏற்றாற்போல் அதிகமாகிறது.
அதன்படி 65 வயது முதல் 84 வயதுடையவர்களில் 13 பேரில் ஒருவருக்கும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கும் அல்சைமர் உள்ளது.
மேலும் அல்சைமர் பாதிப்பு ஏற்பட வயது மட்டுமே காரணமாகாது.
இந்த டிமென்ஷியா பாதிப்பை தடுப்பதற்கோ அல்லது குணப்படுத்தவோ முடியாது. ஆனாலும் சிறந்த வாழ்க்கை முறையினால் அதன் அபாயத்தைக் குறைக்க முடியும்.
உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளை சரியாகப் பராமரிக் வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் நினைவாற்றலை பாதிக்கும்.