நாட்டை விட்டு தப்பிக்க அமைச்சர்கள் முயற்சியா?
எந்த அமைச்சரும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 80 அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற விசா பெற்றுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தேர்தல் பிரசாரங்களின் போது ஒவ்வொருவரும் கூறுவது போல் இதுவும் ஒரு அடிப்படையற்ற கூற்றாக இருக்கலாம்.
எந்த அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வீசா பெற்றுக் கொண்டமை தொடர்பில் எனக்குத் தெரியாது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் யாரும் தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு நாட்டிலும் பத்து வருடங்கள் வாழ நான் விசா வைத்துள்ளேன். எனவே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை என்றார்.
![]()