புடினை சந்தித்த அஜித் தோவல்; சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் புடினை அஜித் தோவல் நேற்று வியாழக்கிழமை சந்தித்தார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மாநாட்டின் இடையே அவர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button