பலதும் பத்தும்
வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும்; அளவு முக்கியம்
சளி, இருமல் ஏற்பட்டால் வெந்நீர் குடிப்பது சிறந்தது என்று கூறுகிறார்கள்.
சிலருக்கு வெந்நீர் குடிப்பது பிடிக்காது. இதய ஆரோக்கியத்துக்கு வெந்நீர் மிகவும் நல்லது.
வெந்நீர் குடிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும், இரத்தத்தின் அளவு சாதாரணமாக இருக்கும்.
இதய ஆரோக்கியத்துக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நேரடியான தொடர்புண்டு.
ஒரு நாளைக்கு வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு தடவை குடிக்கும்போது, உடல் எடை குறையும்.
வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. வெந்நீரில் பல நன்மைகள் உள்ளன. ஆனால், எந்தவொரு விடயமுமே அளவுக்கு மீறிச் சென்றால் அது ஆபத்தாகிவிடும்.
காரணம், வெந்நீரை அதிகம் குடித்தால் உணவுக் குழாயிலுள்ள திசுக்கள் சேதமடைந்து, சுவையரும்புகளை கெடுத்து, நாக்கில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே இனி வெந்நீர் குடிக்க வேண்டுமென்றால் குறைந்த அளவில் குடிப்பது சிறந்தது.