இந்தியா

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று: தொற்று தடுப்பு பணிகளில் உலக நாடுகள்

குரங்கு அம்மை தொற்றுடன் இந்தியாவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டிலிருந்து வருகைத் தந்த ஒருவருக்கே தொற்று அறிகுறி காணப்பட்டுள்ளது.

குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என இந்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10 இல் ஒருவர் உயிரிழப்பதற்கு வாய்ப்பு ள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *