தினம் தினம் உயிரை காவு கொடுக்கும் பலஸ்தீனியர்கள்: தீர்வின்றி தொடரும் போர்

வடக்கு காசாவில் உள்ள ஹலிமா அல்-சாதியா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் சுமார் 33 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பெய்ட்டாவிற்கு அருகே சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில்,

துருக்கிய-அமெரிக்க ஆர்வலர் ஒருவர் இஸ்ரேலின் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களில் 13 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 40,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 94,454 பேர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button