முச்சந்தி

வாக்குச்சீட்டு பொதுவெளியில் பகிர்வு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டைத் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி நபர் வாக்குச்சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயற்பாடு என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சமூக வலைத்தளப் பதிவுக்கு எதிராக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவிடமும், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அறியப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button