பலதும் பத்தும்
தொலைபேசி பாவனைக்கும் மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தமில்லை
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களாக உள்ளனர். 24 மணித்தியாலமும் உடலில் ஒரு உறுப்பு போல தொலைபேசி மாறிவிட்டது.
அந்த வகையில் தொலைபேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பு ஆய்வொன்றை நடத்தியது.
அதில் 10 நாடுகளைச் சேர்ந்த 11 ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 1994ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்விலிருந்து கையடக்கத் தொலைபேசி பாவனைக்கும் மூளைப் புற்றுநோய்க்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென கூறப்பட்டுள்ளது.
தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை என ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.