பாடசாலைகளில் AI மாணவர் சங்கங்கள்

நூறு பாடசாலைகளில் “செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை” ஆரம்பிப்பதற்கான முன்னோடி திட்டத்தை தொடங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களின் பங்களிப்புடன் இம்முயற்சியை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னோடித் திட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் ஏனைய பாடசாலைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

எதிர்கால உலகளாவிய போக்குகளை எதிர்கொள்ளக்கூடிய குடிமக்களை உருவாக்கும் நோக்கங்களை அடையவும், பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை திறம்பட பெறவும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதே திட்டத்தின் குறிக்கோள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button