உலகம்
காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 50 பாலஸ்தீனியர்கள் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் – மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில் தாக்குதலை துவக்கியது.
காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛‛ஹமாஸ்” அமைப்பு இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது.
நேற்று ( ஆக.,21) இஸ்ரேல் இராணுவம் காசா மீது திடீரென நடத்திய வான் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் – காசா இடையேயான போரில் இதுவரை 40 ஆயிரத்து 225 பேர் பலியானதாகவும், 92 ஆயிரத்து 981 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.