இந்தியா

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு: 100 ரூபா நாணயம் வெளியீடு

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபா நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில், கருணாநிதி 100 ரூபா நாணய வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் , “பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய அன்பான வாழ்த்துகளும் ஆதரவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *