அரசியலுக்கு விடைக்கொடுக்கிறார் மகிந்தவின் நெருங்கிய நண்பர்

செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரேஷன் பிரேமரத்ன அண்மையில் நியமிக்கப்பட்டார்.

தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டே வாசுதேவ நாணயக்கார, அரசியலுக்கு கிடைகொடுக்கும் முடிவை எடுத்துள்ளார். இதன்படி அடுத்த பொதுத்தேர்தலிலும் அவர் போட்டியிடமாட்டார் என அவரது கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசுதேவ நாணயக்கார முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கி நண்பர் என்பதுடன், நீண்டகாலமாக அவருடன் இணைந்து அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தவர். அண்மைக்காலமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் செயல்பாட்டு அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button