இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி; 22ஆம் திகதி அறிமுகம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியை எதிர்வரும் 22ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சித் தொடங்கிய பின் அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டெம்பர் 22ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் வண்ணம் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் கட்சிக்கொடியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *